சிறகுகளின் நிறம் ஒவ்வொன்றும்
எனது அகம் மற்றும் புறம் சார்ந்த
சிந்தனைகளின், பார்வைகளின் பிரதிபலிப்பு!
வாழ்க்கை பறவையின் சிறகுகளனைத்தும்
கவிதையெனத் தோன்றும் எனக்கு!
Sunday, August 08, 2010
அருகாமை
இசைதட்டு மாற்று,
சன்னலை இறக்கு,
குளிர்பதனியை சரிசெய்,
ஏனைய அதட்டல்கள் கேளாமல்
அமைதியுடன் பயணிக்கின்றது
எனது வாகனம்.
குட்டி தேவதையின்
அருகாமை மதிப்பு
ஒளியில்லாத இருளுக்கு,
வெப்பமில்லாத தட்பத்திற்கு
புரிவது போன்றது.
No comments:
Post a Comment