எனது மேல்
மாடியில்
எலியொன்றின்
இடைவிடாத
அலைச்சல்
எனது காதுக்குள்
புகுந்து
மண்டை முழுவதும்
பரவி
மறு காதுவழி
வெளியேறுவதாய்
குடைச்சல்
திமிறும் எலியினை
சிறையெடுத்து
தூக்கி வீசி
அமைதி வாழ்வு வாழ
ஆசைதான்
அன்றி
அதன் இருக்கை மறந்து
இயல்பாய் நடித்து
சிந்தை செலுத்துகின்றேன்
எங்கோவொரு மூலையில்
எலி வசித்துக் கொண்டுதானிருக்கின்றது
--கி.வினோத்
3 comments:
Semma reflection of Project Management ;) LOL i agree.
feel like Nakul kavithagal. Great one
```
ராமச்சந்திரனா? என்று கேட்டேன்
ராமச்சந்திரன். என்றார்.
எந்த ராமச்சந்திரன்? என்று நான் கேட்கவில்லை
அவர் சொல்லவுமில்லை
என்று நான் கேட்கவில்லை
அவர் சொல்லவுமில்லை
```
அருமை! Abstraction கவிதையில் அழகு மட்டும் அல்ல, வாசகர்களை வசீகரிக்கும்!
Post a Comment