நான் நாயெனவும்
தெருதான் எனக்கான
வாழ்வியல்
எனவும்
தீர்மானிக்கும் நீ
மனிதனாய் பிறவி எடுத்தும்
மிருக மனதுடனே அலைகின்றாய்
மற்றவனை கீழ்தரமாய்
சிருஷ்டிக்கும்
கலியக பிரம்மாவே
உன்னுடனே போகட்டும்!
உன் உதிரத்தில் உதிர்ந்த
இளைய தலைமுறை
சமவெளியில் பயணிக்க
எம்முடன் கைகள் கோர்க்கட்டும்!
--கி.வினோத்
1 comment:
Lovely
Post a Comment