Thursday, July 24, 2014

புலம்பெயர்தல்

கருவறையினுள் கைவிட்டு
கொடியுடன் பிடுங்கி
தூர எறிதல் போல் 
இந்த புலம்பெயர்தல்!
கதி கலங்கியது 
கருவறையே பொசுங்கியதும்.
உயிர் பயமோ,
உயிர் வலியோ,
தூரத்து விடியலை 
துரத்தியே 
முடிவற்ற  ஓட்டம்...

No comments: