Monday, July 05, 2010

பார்வை


தனிமை ஆணுக்கும் தகிக்கும்
என உணர்த்த நானும்,
கொடுஞ்செயல் பெண்ணுக்கும் பழக்கம்
என உணர்த்த அவளும்
பிரிகின்றோம்!
பொதுவாய் பெண்மைக்கு
பலம் சேர்ப்பதே
மண்ணின் பெருமையென இந்த
சாயம் பூசிய சமுதாயம்
காட்சி பொருளாக்கி
அழ வைத்தது என் ஆண்மையை!
பெண்மை முகமூடிக்கு பின்புறம்
குரூர களிப்புடன் சிரித்தாலும்
வெளிபுறம் அழுகின்றாள்
என்றும் போலவே!
அன்றும்
கைபிடித்தவனை காதலித்து
உடனிருக்கவில்லை அவள்!
இன்றும்
எதிராளியென நினைத்து
எதிர்க்கவில்லை நான்!
சாயம் கலைத்த சமூகம்
மெல்ல மெல்ல சரிந்து
என் மீது படர்கையில்
விடியும் இருவருக்கும்!
             --கி.வினோத்

5 comments:

Preethi said...

Ramya ponathaan kavithai eluthuveenga pola ;-).
Anyways, liked it very much! Ini chennai pogum varai kavithai payanam thodarattum :). Will wait for the next.

Kirubakaran said...

Wow! You right on what you said. We had bharathar in 1940 for women freedom. the disagreed fact is that this went beyond their freedom.
We need a neutralizer now... We need more vinodths now to stop this kodujaial!!!!

கி.வினோத் said...

மறுமொழிக்கு நன்றி!

Impressionist said...

Great. Looks like your touch is still with you. do write more

கி.வினோத் said...

@Impressionist: Thanks!