Thursday, July 15, 2010

விளையாட்டு

சிலருக்கு
துளி துளியாய்
மனம் புகும்
மெல்லிசையாய்
அமைகின்றது
வாழ்க்கை வரப்பிரசாதம்!

சிலருக்கு
அடி அடியாய்
மனம் அதிரும்
பறையொலியாய்
வாய்க்கின்றது
வாழ்க்கை பிடிசாபம்!

நேற்றை மிஞ்சிய
இன்றையக் கொடுமை
நாளையும் பன்மடங்காய்
விரியுமென
விளிம்புவரை வந்து
வெறுத்து அயர்ந்தது
மேலுமொரு அடிதாங்காத
மனது!

விதிக்கப்பட்ட களத்தில்
வழங்கப்பட்ட வீரர்கள்
வைத்து விளையாட்டு!
இடைவெளி பிளந்து
உயிர்ப்பந்து நகர்த்தி
நிம்மதி இலக்கடைய
நெடுநேரப் போராட்டம்!

அவர் அவருக்கென
வகுக்கப்பட்டதில்
சிறு சிறு சுகம்தேடி
விரைகிறது ஆட்டம்!
-- கி.வினோத்

No comments: