Sunday, May 26, 2024

நினைவுகளின் விலை

நிகழ்வுகளை

நிழற்படங்களாய் ஆல்பத்தில் கோர்த்து

நேரம் கிடைக்கையி்ல் புரட்டிபார்த்து

நாளடைவில் மழுங்கி நிறமிழந்து

நசிந்துவிடும் காலமது இருப்பினும்

நினைவுகளை கிளரச்செய்து

நிறைவாகத்தானிருந்தது!


கண்சிமட்டல்கூட தவறாமல்

கைப்பேசியில் கவர்ந்து கோடானுகோடி பிம்பங்கள் டெராபைட்டாக

மேக கணிணியில் சேமித்து

நூற்றாண்டுகள் அழியாமல் கடத்தினாலும்

நின்று இரசிக்க நேரமில்லை

நிதமும் உயர்வதோ

நினைவுகளின் விலை!


— கி.வினோத்

14/04/2024

No comments: