திறைகடல் தாண்டி திரவியம் தேடுபவர் கோடி
தூரமொரு பொருட்டின்றி வாழ்ந்தனர் கவிப்பாடி
திசைக்கொரு தேசமென தாயகம் விடுத்தனர்
தனம்பெருக்கவென பெரும்பான்மையினர்
தம்மக்கட் படிப்பிற்கென பலப்பேர்
தேசாதி தேசங்கள் வலம்வர சிலர்
தன்னார்வமுடனோ தள்ளப்பட்டோ தவித்தனர்
தற்கால சடுதியில் கலந்துவிட்ட புதுவுலகம்
தனதானவர்களின் நினைவிலேயே கரைந்து மறு உலகம்
தணல்போல் உவகையில் மிதக்கையில் தெரிவதில்லை
திடுக்கிடும் துக்கசேதியில் துவண்டிடும் இயலாமை
தடுமாறும் அயல்நாட்டாரின் நெஞ்சோரம்
ஈருலக சஞ்சாரம்!

-- கி.வினோத்
No comments:
Post a Comment